பஜாஜ் பல்சார் என்160
பஜாஜ் நிறுவனம், புதிய பல்சார் என்160 வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில், 164.82 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 15.68 பிஎச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்-ல் 14.65 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதற்கு முன்பு அறிமுகமான என்160 பைக்கில் ஸ்பிளிட் சீட் இடம் பெற்றிருந்தது. புதிய வேரியண்டில், வாடிக்கையாளர்கள் விருப்பத்தை ஏற்று சிங்கிள் சீட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டூயல் டிஸ்க் பிரேக்குகள், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பியர்ல் மெட்டாலிக் ஒயிட், ரேசிங் ரெட், போலார் ஸ்கை புளூ, புளூ அண்ட் பிளாக் என 4 வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.24 லட்சம். இது ஸ்பிளிட் சீட் வேரியண்டை விட சுமார் ரூ.2,000 குறைவாகும்,
Advertisement
Advertisement