ஜாமீன் கேட்கும் மனுக்கள் மீது மூன்று முதல் ஆறு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில், போலி ஆவணங்கள் தயாரித்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, “இந்த விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில் ஜாமீன் கேட்கக்கூடிய மனுக்கள் மீது குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என அனைத்து மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Advertisement