ஈடி வழக்கு: மே.வங்க அமைச்சருக்கு ஜாமீன்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பள்ளி ஆசிரியர்கள் நியமன வழக்கில் மேற்குவங்க சிறு,குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹாவின் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சோதனை நடத்தினர். பின்னர் கொல்கத்தாவில் உள்ள அமலாக்க இயக்குநரக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது நீதிமன்றம், சந்திர்நாத் சின்ஹாவுக்கு ரூ.10,000 பிணையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Advertisement
Advertisement