நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன்: 100 கோடி அபராதம்
சென்னை: நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவுக்கு ஐகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 30 வரை தேவநாதன் யாதவுக்கு இடைகால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சொந்த பணமாக 100 கோடி ரூபாயை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமனறத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். நிபந்தனைகளை தேவநாதன் மீறினால் மீண்டும் சரண்டர் ஆகி சிறை செல்ல வேண்டும். பாஸ்போர்ட்டை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் ஸ்ரீதிமன்றத்தில் தேவநாதன் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.