ஆயுர்வேத சிகிச்சை எடுத்த கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் காலமானார்
கொச்சி: கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா அமோலோ ஒடிங்கா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. நாள்பட்ட சிறுநீரக நோய் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஒடிங்கா, கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூத்தாட்டுக்குளத்திற்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தார். ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் காலை நடைப்பயணத்தின் போது ஒடிங்கா சரிந்து விழுந்தார். முதலுதவி சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் கென்யாவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement