தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுத பூஜை கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஆயுத பூஜை கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்த 2 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் விடுமுறை ஆகிவிடும். அதாவது, சனி, ஞாயிற்றுக்கிழமையை சேர்த்தால் 5 நாட்கள் விடுமுறை வருகிறது.

Advertisement

இதனால், இந்த விடுமுறை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், வழக்கமான தினங்களில் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்து வருகிறது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கூட்ட நெரிசலை குறைக்க இன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (வ.எண்: 06075) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.

அதேபோல 5ம் தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இதே போல தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. இந்த ரயில் விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடைகிறது. இந்த ரயில் மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு அறிவிப்பு வெளியான உடனே முன்பதிவு தொடங்கியுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement