ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்: டிடிவி தினகரன்
சென்னை: ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், செய்யும் தொழிலையே தெய்வமாகப் போற்றிடும் வகையில் அவரவரது தொழிலுக்கு ஆதாரமாக விளங்கிடும் தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி அவற்றை வழிபடும் நன்னாளே ஆயுத பூஜை திருநாளாகும்.
அன்னை மகா சக்தியை வணங்கித் தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் கல்வி, கலை, தொழில் போன்றவற்றைத் தொடங்கிடும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும். ஊக்கத்துடன் கூடிய உழைப்பே வறுமையைப் போக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் இந்நாட்களில், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு பெற்றிட வேண்டும் என வேண்டி மீண்டும் ஒருமுறை எனது ஆயுதபூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.