அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிப்பு..!!
உத்தரபிரதேசம்: அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிலில் மசூதி கட்டும் திட்டத்தை நிராகரித்தது தெரியவந்தது. பொதுப்பணி, உள்ளாட்சி, தீயணைப்பு துறைகளின் ஒப்புதல் பெறவில்லை என கூறி நிராகரிக்கப்பட்டது.
Advertisement
மசூதி அறக்கட்டளை ரூ.4.02 லட்சம் விண்ணப்பத் தொகையை செலுத்தியதாக தகவல் வெளியானது. மசூதி கட்ட அரசு தடையில்லா சான்று தராதது வியப்பாக உள்ளது என மசூதி அறக்கட்டளை செயலாளர் அத்தர் உசேன் தெரிவித்தார். 2019 உச்ச நீதிமன்ற அயோத்தி வழக்கு தீர்ப்பின்படி 5 ஏக்கர் நிலம், சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்கப்பட்டது. ஒரு முக்கியமான இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் 2019ல் உத்தரவிட்டது.
Advertisement