தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் வாங்க கற்றுக்கொள்வோம் தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி
*பொதுமக்கள் பங்கேற்பு
Advertisement
புதுக்கோட்டை : தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் சத்தியகீர்த்தி வழிகாட்டுதலின்படியும் சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் போக்குவரத்து சுந்தரமூர்த்தி தலைமையில் பொது மக்களுக்கு வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
இதில் சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர் இதன் மூலம் பொதுமக்கள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு அறிந்து கொண்டு பயனடைந்தனர்.
Advertisement