தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏவிஎம் சரவணன் மறைவு திராவிட இயக்க திரை பயணத்தில் நீண்ட தொடர்பு கொண்டவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

 

Advertisement

சென்னை: ஏவிஎம் சரவணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏவி.எம். சரவணன் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் அவருடைய பங்கும் அளப்பரியது.

புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம்.முக்கு புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறனின் “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன்.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்.மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* தலைவர்கள் இரங்கல்

செல்வப்பெருந்தகை (காங்.): தமிழ் சினிமாவின் மரபையும், மரியாதையையும் தன் தோள்களில் சுமந்து முன்னேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன். தரமும், நேர்மையும் கலந்த படைப்புகளின் மூலம் தலைமுறைகளின் மனதில் இடம்பிடித்த அன்னாரது பிரிவு தமிழ் திரையுலகினருக்கு பேரிழப்பாகும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): திரைப்படத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னணி தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்.. தமிழ்த் திரையுலகில் தனித்தன்மையுடன் விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தை, அதன் பாரம்பரிய பெருமைக்கு மேலும் புகழ் சேர்க்கும் முறையில் நிர்வகித்து வந்தார்.

பிரேமலதா (தேமுதிக): முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் விஜயகாந்தின் மிகச் சிறந்த நண்பர். ஏவி.எம் தயாரிப்பில் வெளியான மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ் போன்ற திரைப்படங்களில் கேப்டன் நடித்துள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஏவி.எம். பட நிறுவனத்தின் சார்பில் பல்வேறு திரைப்பட இயக்குனர்களையும், நடிகர், நடிகைகளையும், இசையமைப்பாளர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.

அன்புமணி (பாமக): ஏவி.எம். சரவணன் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த அவர், ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்.

ஓ.பன்னீர்செல்வம்: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் என்ற செய்தியறிந்து மன வேதனையும் அடைந்தேன். அவரது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisement