புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்: பவன் கல்யாண் இரங்கல்
ஆந்திரா: புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன் என நடிகரும், ஆந்திர துணைமுதலமைச்சருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியத் திரைப்படத் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஏ.வி.எம். நிறுவனத்தை சரவணன் திறமையாக நடத்தினார்.
Advertisement
சிரஞ்சீவியுடன் தயாரிக்கப்பட்ட "புன்னமி நாகு" திரைப்படம், தலைமுறை இடைவெளியைப் பொருட்படுத்தாமல் இன்றும் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. "சம்சாரம் ஓக சதுரங்கம்", "ஆ ஒகடி அடக்கு", "லீடர்", "மெருபு கலலு, "சிவாஜி" போன்ற படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சரவணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement