அவிநாசி புதுப்பெண் தற்கொலை வழக்கு மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Advertisement
இதுகுறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சித்ராதேவி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் தந்தை சார்பில் ஜாமீன் வழங்கக்கூடாது என்று இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி குணசேகரன் மனுவை விசாரித்து சித்ராதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Advertisement