தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : முடிஞ்சா என்ன தொடுங்க பார்போம்

மதுரை : மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 4-வது சுற்று முடிவில் 14 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 7 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 6 பேர், பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 14 பேர் காயடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியை சேர்ந்த வீரர் டேவிட் வில்சன், மாடு குத்தியத்தில்

படுகாயமடைந்தார். காயமடைந்த டேவிட் வில்சன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்

4-வது சுற்று முடிவில் அரியலூரை சேர்ந்த மணி 3 காளைகளை அடக்கி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது :வரை 370 காளைகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் 16 காளைகள் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக கால்நடை மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீத தலைமையில் மாடு பிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அவனியாபுரத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவனியாபுரத்தில் 15 ஆம்புலன்ஸ் வண்டிகளும் சுமார் 26 மருத்துவ குழுக்களும் தயாரான உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிந்துள்ளது.சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீருக்கு துணை முதல்வர் நிசான் காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.