தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்

அவனியாபுரம்  : புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. இதில் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதல் பரிசாக மாடுபிடி வீரருக்கு கார் வழங்கப்பட்டது. ஜல்லிக் கட்டில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 65 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின
மதுரை மாநகராட்சி சார்பில் 51.18 லட்ச ரூபாய் செலவில் வாடிவாசல் மாடுபிடி வீரர்களுக்கான முன்னேற்பாடுகள் காளைகளுக்கு முன்னேற்பாடுகள் என்று அனைத்தையும் டெண்டர் விடப்பட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டன. வழக்கமாக சுத்துவாடி வாசல் இல்லாமல் ரயில் தண்டவாள  அமைப்பில் நீளமான வாடிவாசல் அமைக்கப்பட்டது. மேலும் வாடிவாசல் ஆரம்பித்து மாடு சேகரிக்கும் இடம் வரை 1.8 கிமீ தூரத்திற்கு 8 அடி உயரத்தில் இரும்பு கிராதி கொண்டு இரு அடுக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழ் பெற்ற காளைகள் பதியப்பட்டு அதில் 1,100 காளைகள் பங்கேற்க டோக்கன் ஆன் லைன் மூலம் வழங்கப்பட்டது. அதே போல்  மாடுபிடிவீர்கள் ஆன்லைன் மூலம் பதியப்பட்ட 900  பேருக்கு பங்கேற்க  டோக்கன்  வழங்கப்பட்டது.
 இதனை அடுத்து நேற்று காலை 7 மணி அளவில் வணிக வரி துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. இதில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை ஆணையாளர் தினேஷ்குமார் , மதுரை காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்த  பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில்    காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள்  ஒரு சுற்றுக்கு 50 பேர் என   500 பேர் களமிறங்கினர்.
 கால்நடை துறை சார்பில் கால்நடைத்துறை மண்டல இயக்குனர் சுப்பையன் மேற்பார்வையில் கால்நடை துறை உதவி இயக்குனர் பழனிவேல் தலைமையில் அவனியாபுரத்தில்  ஜல்லிக்கட்டு காளைகள் டோக்கன்கள் க்யூ ஆர் கோடு மூலம்  ஆய்வு செய்யப்பட்டு பின்னர் காளைகள் உடல் பரிசோதனை செய்யும் இடம்  வரும் காளைகள் கட்டும் இடம் அவிழ்த்து விடும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் 21 மருத்துவர்கள் தலைமையில் 65 பேர்
பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் காளை  பரிசோதனையில் 21 காளைகள் போலி டோக்கனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.  அதேபோல் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி இந்திரா தலைமையில் 75 மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் தகுதியை பரிசோதனை செய்த பின் களத்திற்கு அனுப்பினர்
காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிகிச்சை அளித்தனர் மேலும் எலும்பு முறிவு கண்டறிய  அறிய  நடமாடும் எக்ஸ்ரே வாகனம் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 12 ஆம்புலன்ஸ், 2 பைக் ஆம்பூலன்ஸ் தயார் நிலையில் இருந்தன. மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையாளர்கள் பத்து உதவி ஆணையாளர்கள் உட்பட 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை குடிநீர் வசதி காளைகளுக்கு உணவு நீர். மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 2 இடங்களில் எல்இடி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 65 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 28 இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விளாங்குடியை சேர்ந்த நவீன் (23) என்ற வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 803 காளைகளில் தகுதியிழப்புக்கு பிறகு 773 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்களில் முதல் பரிசாக 19 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் திருப்பரங்குன்றம் கார்த்திக்கு கார் வழங்கப்பட்டது.
2ம் பரிசாக 17 காளைகளை அடக்கிய அரவிந்த் திவாகருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மேயர் இந்திராணி பொன்வசந்த் சார்பாக முதல் பரிசுடன் கன்றுடன் கூடி பசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக கான முதல் பரிசாக புதுக்கோட்டை பொன்னமராவதியை சேர்ந்த மலையாண்டிக்கு  டிராக்டர்,  2வது பரிசாக ஜி.ஆர்.கார்த்திக்கிற்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.  மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காலை உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்க காசு, பேன், கட்டில், பீரோ அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள்
வழங்கப்பட்டன.

Related News