தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆஸியுடன் 2வது ஓடிஐ தென் ஆப்ரிக்கா அமோக வெற்றி: தொடரை கைப்பற்றியது

மேக்கே: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்று, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்ற நிலையில், மேக்கே நகரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் அய்டன் மார்க்ரம் (0 ரன்), ரையான் ரிக்கெல்டன் மோசமாக ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின் வந்த டோனி டி ஸோர்ஸி பொறுப்புடன் ஆடி 38 ரன் எடுத்தார். அதன் பின், பிரீட்ஸ்கியும், டிரிஸ்டன் ஸ்டப்சும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரீட்ஸ்கி 88 ரன்னிலும், ஸ்டப்ஸ் 74 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 49.1 ஓவரில் தென் ஆப்ரிக்கா 277 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

Advertisement

அதையடுத்து, 278 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 6 ரன்னிலும், பின் வந்த மார்னஸ் லபுஷனே 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். அவர்களை தொடர்ந்து கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்னில் நடையைக் கட்டினார். பின் வந்தோரில் கேமரூன் கிரீன் 35 ரன், ஜோஷ் இங்லீஸ் 87 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதன் பின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால், 37.4 ஓவரில் ஆஸி 193 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், 84 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக, 5 விக்கெட் அள்ளிய தென் ஆப்ரிக்காவின் லுங்கி நிகிடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஒரு நாள் போட்டி வரும் 24ம் தேதி நடக்கவுள்ளது.

Advertisement