முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி
ஒரு கட்டத்தில் வெ.இ 15.3ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 159ரன் வலுவான நிலையில் இருந்தது. அதன்பிறகு களம் கண்ட ரோமன் பாவெல் 1, ஆந்த்ரே ரஸ்ஸல் 8, ஷெர்ஃபன் ரூதர்ஃபோர்ட் 0, ஜேசன் ஹோல்டர் 0, ஆட்டமிழக்காமல் குடகேஷ் மோதி 0, அல்சாரி ஜோசப் 3 ரன் மட்டுமே எடுத்தனர். அதனால் வெ.இ 20ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189ரன் எடுத்தது. அதிலும் கடைசி 16பந்தில் 7 ரன் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டை வெ.இ பறிகொடுத்தது. ஆஸி தரப்பில் பென் தவார்சுயிஸ் 4 விக்கெட் அள்ளினார்.
அதனையடுத்து 190ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸி அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்தாலும் 18.5ஓவரில் இலக்கை தொட்டது. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 190ரன் எடுத்து 3விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரான் கிரீன் 51(26பந்து), மிட்செல் ஓவன் 50(27பந்து), கேப்டன் மிட்செல் மார்ஷ் 24(17பந்து) ரன் விளாசினர். வெ.இ வீரர்களில் ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், குடகேஷ் மோதி தலா 2விக்கெட் கைப்பற்றினர். அறிமுக வீரர் மிட்செல் ஓவன் முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த 2 அணிகளும் மோதும் 2வது டி20 ஆட்டம் இதே கிங்ஸ்டன் அரங்கில் நாளை காலை நடைபெறும்.