கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாளில் பதிவுத்துறையில் ரூ.302.73 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை: பதிவுத்துறையில் கடந்த 1ம் தேதி கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக முன்பதிவு வில்லைகளின் எண்ணிக்கை உயர்த்தி வழங்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளைப் பயன்படுத்தி கடந்த 1ம் தேதி ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் ரூ.302.73 கோடி வருவாய் அரசுக்கு ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement