சென்னை: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தியுள்ளது.