ஆகஸ்டில் இந்தியாவில் வாகன விற்பனை 2.84% உயர்வு: எஃப்.ஏ.டி.ஏ. அமைப்பு தகவல்
டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை 2.84% அதிகரித்து 19,64,547ஆக உள்ளது என எஃப்.ஏ.டி.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது. 2024 ஆகஸ்டில் 19,10,312ஆக இருந்த வாகனங்களின் விற்பனை 2025 ஆகஸ்டில் 19,64,547 ஆக அதிகரித்துள்ளது. கார் உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனையும் கடந்த மாதத்தில் 3,23,256 ஆக உயர்ந்துள்ளது என டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆகஸ்டில் 13,44,380 ஆக இருந்த இருசக்கர வாகன விற்பனை கடந்த மாதம் 13,73,675ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்டில் லாரிகள், டிரக்குகள் உள்ளிட்ட வர்த்தக வாகன விற்பனை 1,05,493ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement