கவர்ச்சி ஆப் மூலம் அழைத்து ஆப்பு; இளம்பெண்களிடம் உல்லாசம் தேடி வந்த தொழிலதிபரை மிரட்டி ஓரினசேர்க்கை: நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பல லட்சம் பறித்த கும்பல்
கடந்த சில நாட்களுக்கு முன், ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில் - காவல் கிணறு நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியை கூறி அங்கு வந்தால் இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைப்பு வந்தது. அந்த இளம் தொழிலதிபரும், அந்த பகுதிக்கு செல்ல, மறைந்திருந்த கும்பல் அந்த வாலிபரை சுற்றி வளைத்தது. முதலில் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்தனர். இதை வெளியே கூறினால், நெட்டில் பரப்பி விடுவோம் என மிரட்டினர். அப்போதுதான் அவர்கள் ஓரின சேர்க்கை கும்பல் என்பது தொழிலதிபருக்கு தெரிய வந்தது. அவரை நிர்வாணமாக்கிய பின், அந்த கும்பலில் இருந்த இரு வாலிபர்கள் தங்களது ஆசைகளை அவரிடம் தீர்த்தனர். அதையும் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த தொழிலதிபர் வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும் பறித்து விட்டு மிரட்டி அனுப்பினர். இளம்பெண்கள் மீதான ஆசையில் வந்தவர், பணத்தையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி சென்றார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.