ஏடிபி டென்னிஸ் தரவரிசை ஜானிக் சின்னர் மீண்டும் நம்பர் 1
பாரிஸ்: பிரான்சின் நான்டெரெ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதியில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அலியஸிமேவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியை தொடர்ந்து, ஆடவருக்கான ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ஜானிக் சின்னர், 11,500 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில், 11,250 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் மீண்டும் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர்களை தொடர்ந்து, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5560 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் 4735 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4580 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement