ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: பாஜ பிரமுகர் கைது
Advertisement
மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது இச்சம்பவத்தில் ஈடுபட்டது அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54) என்பதும், இவர் பாஜ திருப்பூர் மாவட்ட பிரசார அணி செயலாளர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக முரண்பட்ட தேதியுடன் திருப்பூர் மாவட்ட பாஜ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன், முருகானந்தம் இருக்கும் படம் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement