ஏதெர் 450 அபெக்ஸ்
ஏதெர் நிறுவனம், புதிய 450 அபெக்ஸ் ஸ்கூட்டரை சந்தைப்படுத்தியுள்ளது. இதில் புதிய அம்சமாக குரூஸ் கண்ட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிட்டி குரூஸ், ஹில் கண்ட்ரோல், கிரவுல் கண்ட்ரோல் என 3 குரூஸ் கண்ட்ரோல் மோட்கள் உள்ளன. சிட்டி குரூஸ் கண்ட்ரோலை குறைந்த பட்சம் 10 கி.மீ வேகத்தில் இருந்து இயக்கலாம்.
Advertisement
ஹில் கண்ட்ரோல் மூலம் மைலப்பகுதியில் சாலையில் ஏறும்போது சீரான வேகத்தில் செல்லும் வகையிலும், சரிவான பாதையில் கீழே இழுக்கப்படாத வகையிலும் பிரேக் மற்றும் சரியான டார்க்கை இணைத்து வாகனத்தை இது இயக்கும். கிரவுல் கண்ட்ரோல் என்பது மோசமான சாலைகளில் குறைந்த பட்சம் 10 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.7 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.1.89 லட்சம்.
Advertisement