தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கூடுதலாக ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்கும் பணிகள் தீவிரம் : புதிய ரயில்கள் இயக்க முடியும்

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், கூடுதலாக ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், வருமானத்தின் அடிப்படையில் என்.எஸ்.ஜி. 3 வகை ரயில் நிலையம் ஆகும். தற்போதைய ரயில் நிலைய வருவாய் ஆண்டுக்கு ரூ.80 கோடியை தாண்டி உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் குறைந்த அளவில் ரயில்களை இயக்கி அதிக வருவாய் ஈட்டும், ரயில் நிலையங்களில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 5 வது இடத்தில் உள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து பிட்லைன் முதல் நிலை பராமரிப்பு, பிட் லைன் இரண்டாம் நிலை பராமரிப்பு, ரயில் பெட்டிகள் பழுதுபார்த்தல், ரயில்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்தல் என பல்வேறு கட்ட பணிகள் நடைபெறுகிறது.

Advertisement

கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் நெடுந்தூர ரயில்களும் அங்கு பராமரிப்பு வசதி இல்லாத காரணத்தால் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு காலியாக கொண்டு வந்து இங்கு வந்து பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்திவைக்கவும், பராமரிப்பு செய்யவும் கூடுதல் வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இட நெருக்கடி காரணமாக இன்டர்சிட்டி ரயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில முக்கிய ரயில்கள், நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படுகிறது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முனைய விரிவாக்க திட்டம் நாகர்கோவில் - மணியாச்சி இருவழிபாதை திட்டத்தில் கீழ் செய்ய செயல்வடிவம் கொடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

நாகர்கோவிலுக்கு நெடுந்தூரத்திலிருந்து ஒரு ரயில் வந்து சேர்ந்ததும், அந்த ரயில் ரயில் பெட்டிகளை 8 மணி நேரம் பிட்லைனில் வைத்து முதல்நிலை பராமரிப்பு செய்ய வேண்டும். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து முதல் நிலை பராமரிப்பு செய்யப்படும் ரயில்களில் கன்னியாகுமரி - புனே, நாகர்கோவில் - மும்பை, நாகர்கோவில் - காந்திதாம், கன்னியாகுமரி - நிஜாமுதீன் போன்ற ரயில்கள் முக்கியமான ரயில்களாகும்.

இந்த ரயில்களை பராமரிப்பு செய்ய மூன்று பழைய பிட்லைன்களும் இரண்டு புதிய பிட்லைன்களும் சேர்த்து மொத்தம் ஐந்து பிட்லைன்கள் உள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தற்போது நான்கு நடைமேடைகள் உள்ளன. இதில் மூன்று நடைமேடைகள் திருநெல்வேலி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி என மூன்று மார்க்கமும் ரயில்களை இயக்க முடியும்.

நடைமேடை 1ஏ திருவனந்தபுரம் மார்க்கம் மட்டுமே உள்ள ரயில்களை கையாள முடியும். முனைய விரிவாக்க திட்டத்தின் கீழ் புதிதாக 625 மீட்டர் அதாவது 26 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள் இரண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர புதிதாக 9 ஸ்டேபிளிங் லைன் பணிகள் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன. ஸ்டேபிளிங் லைன் என்பது ரயில்கள் நிறுத்தப்படுவதற்கும், பராமரிப்பதற்கும், காத்திருப்பதற்கும் ஒதுக்கப்பட்ட கூடுதல் ரயில் பாதைகள் ஆகும். அதிக ரயில்கள் வரும் போது அவற்றை கையாள இந்த ஸ்டேபிளிங் லைன்கள் தான் உதவுகின்றன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஸ்டேபளிங் லைன்கள் அமைக்க வேண்டிய இடத்தில் தற்போது பணிகள் தொடங்கி உள்ளன.

முதற்கட்டமாக 3 ஸ்டேபிளிங் லைன்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள், முடிந்தால் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறி உள்ளனர். ஒரு சில ரயில்கள் அனுமதி அளிக்கப்பட்டு முனைய பிரச்னையால் இயக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இது போன்ற ரயில்கள் திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலியுடன் நின்றுவிடும். குமரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலி சென்று அங்கிருந்து பயணம் செய்து அந்த ரயில் நிலைய வருவாய் அதிகரிக்க காரணமாகி விடும். எனவே நாகர்கோவில் ரயில் நிலைய முனைய விரிவாக்க பணிகளை வேகப்படுத்தும் வகையில், முதலில் ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை ஆகும்.

பகாலி ரயில் பெட்டிகள் வர தனி இருப்பு பாதை

கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் 1000 கி.மீக்கு அதிக தூரம் இயக்கப்படும் ரயில்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு பராமரிப்புக்கு காலி பெட்டிகள் இரண்டு மார்க்கமும் கொண்டு வரப்படுகின்றது. தினசரி நான்கு ரயில்கள் வாரத்துக்கு சராசரியாக 30 காலி பெட்டிகள் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்படுகின்றது. கன்னியாகுமரியிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் போது இது இன்னமும் அதிகரிக்கும். இவ்வாறு நாகர்கோவிலுக்கு பராமரிப்புக்கு என்று காலி ரயில் பெட்டிகளை கொண்டு வருவதற்கு என தனியாக ஓர் இருப்பு பாதை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 1ஏ யை 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்தம் அளவுக்கு நீளத்தை அதிகரிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் 2008-19ம் ஆண்டு திட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நடைமேடை 1பி யை அமைக்க வேண்டும் என்பதும் ரயில்வே நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் உள்ள பணியாகும். இந்த பணிக்கான வேலைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News