7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ திடீர் ரத்து: நெல்லை பல்கலை. பதிவாளர் அறிவிப்பு
Advertisement
தமிழ்நாட்டில் இந்த தேர்வை நெல்லை மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்காக கடந்த ஏப். 1 முதல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பம் பெறப்பட்டன. விண்ணப்பிக்க மே 15 தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்வு எழுத சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து செட் தேர்வு நாளை(ஜூன்7) மற்றும் ஜூன் 8ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் செட் தேர்வை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement