ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
07:05 PM Jul 28, 2024 IST
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் கார்த்தி, நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். வாகன தணிக்கையில் மதுபோதையில் சிக்கியவரிடம் அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக புகார் எழுந்தது. கார்த்தி, நாகராஜ் மீதான புகாரை அடுத்து இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.