9,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அன்புமணி வலியுறுத்தல்
Advertisement
அதேபோல், 2025ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்டம் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட போது, அதில் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை தேர்வுக்கான தேதி கூட அறிவிக்கப்படவில்லை.
மேலும், அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள 90 சதவீத உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement