சட்டசபை இணை செயலாளர் திடீர் மரணம்
தூத்துக்குடி: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-26ம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு, தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று முன்தினம் சென்றது. இந்த குழுவுடன் சென்ற தமிழக சட்டசபை இணைச் செயலர் ரமேஷ்(57) என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement