சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜவில் 234 தொகுதிகளுக்கும் அமைப்பாளர், பொறுப்பாளர்கள்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
* கே.டி.ராகவன், வினோஜ் பி.செல்வம், பால் கனகராஜ் இடம் பெற்றனர்
சென்னை: சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜவில் 234 தொகுதிக்கான அமைப்பாளர், பொறுப்பாளர்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் 234 சட்டமன்ற தொகுதிக்கான அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி, தாம்பரம்- மாநில அளவிலான பிரிவு ஒருங்கிணைப்பாளர் கே.டி.ராகவன், பொன்னேரி(தனி)- முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஜானகிராமன், சோழிங்கநல்லூர்- மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, ராஜ்குமார். ஆலந்தூர்- மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தி.நகர்- மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், சைதாப்பேட்டை- ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளர் கே.தாமோதர்(ஷெல்வி), விருகம்பாக்கம்-முன்னாள் இளைஞர் அணி தலவைர் ரமேஷ் சிவா.
மயிலாப்பூர் மாநில துணை தலைவர்- கரு.நாகராஜ், ஆயிரம் விளக்கு-மகளிர் அணி மாநில துணை தலைவர் காயத்ரி சீனிவாசன், சேப்பாக்கம்- மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், துறைமுகம்- விருந்தோம்பல் பிரிவு மாநில துணை தலைவர் ஜி.கே.சுரேஷ், அண்ணாநகர்- மாவட்ட தலைவர் லதா சண்முக சுந்தரம், எழும்பூர்(தனி)- மாநில துணை தலைவர் எம்.வெங்கேடஷ், வில்லிவாக்கம்- முன்னாள் மாவட்ட தலைவர் என்.தனசேகர்,
மாதவரம்- அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில அமைப்பாளர் ஜி.ராதாகிருஷ்ணன், அம்பத்தூர்- மாநில துணை தலைவர் எஸ்.எம்.சக்ரவர்த்தி, மதுரவாயல்- தேசிய மொழிகள் பிரிவு மாநில தலைவர் கே.பி.ஜெயக்குமார், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்- மாவட்ட துணை தலைவர் எஸ்.வன்னியராஜா, திருவொற்றியூர்- தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.ராமையா, ராயபுரம்- மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.பிரகாஷ்,
திருவிக நகர்- மாவட்ட பொதுச்செயலாளர் பி.கே.இளங்கோ, கொளத்தூர்- மாநில துணை தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பெரம்பூர்-முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர், இளமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ மாநில செற்குழு உறுப்பினர் எஸ்.விஜயதரணி, மதுரை தெற்கு தொகுதி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ஆர்.ராமசீனிவாசன், பட்டுக்கோட்டை- மாநில பொதுச்செயலாளர் எம்.முருகானந்தம், பண்ருட்டி- மாநில செயலாளர் ஏ.அஸ்வத்தாமன் உள்பட 234 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.