6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் இருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் வலியுறுத்தல்
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் பாஜவின் மிகப்பெரிய கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது, 6 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த வேண்டாம். வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையானது குடியுரிமை சரிபார்ப்புடன் தொடர்புடையது இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை பிரதிநிதிகள் குழு வலியுறுத்தி உள்ளது. கோரிக்கைகள் அடங்கிய மனுவும் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும்போது பீகார் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெலுங்கு தேசம் விரும்புவதை இது காட்டுவதாக உள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை தொடங்க கூடாது - காங்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னையா குமார் கூறுகையில், ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை தொடங்கக்கூடாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அது வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும். சரியான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். 3 மாதங்களில் என்ன செய்ய முடியும். அதற்கு 13 மாதங்கள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலை திருத்த வேண்டும் -குடியுரிமை சான்றை கேட்கக்கூடாது. அது உள்துறை அமைச்சகத்தின் வேலையாகும்” என்றார்.