அசாமை சேர்ந்த மாஜி ஒன்றிய அமைச்சர் பாஜவுக்கு முழுக்கு
கவுகாத்தி: அசாமை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜென் கோஹைன்(74) நாகான் தொகுதியில் இருந்து 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2016 முதல் 2019 வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக பதவி வகித்துள்ளார். ராஜென் கோஹைன் கடந்த அக்டோபர் 9ம் தேதி பாஜவில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ராஜென் கோஹைன் நேற்று சாம் ஜெய்த்ய பரிஷத்(ஏஜேபி) கட்சியில் சேர்ந்தார். இந்நிகழ்ச்சியில் ஏஜேபி தலைவர் லுரிங்ஜோதி கோஹைன் மற்றும் ஜெகதீஷ் புயான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜென் கோஹைன் கூறுகையில்,‘‘ அசாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜ தவறியது.பழங்குடி மக்களுக்கு துரோகம் விளைவித்தது.வெளிமாநிலத்தவரை குடியேற அனுமதிப்பதன் மூலம் பழங்குடி சமூகத்தினருக்கு துரோகம் இழைத்துள்ளது. பாஜவின் மாநில தலைமை பல நூற்றாண்டுகள் பழமையான அசாமிய சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.