அசாமில் 18வயதுக்கு மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம்
கவுஹாத்தி: அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சர்மா, ‘‘18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டையை இதுவரை பெறவில்லை என்றால் விண்ணப்பிப்பதற்கு ஒரு மாதம் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். அக்டோபர் முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் கார்டு வழங்கப்படாது.
எனினும் தேயிலை தோட்ட பழங்குடியினர், 18வயதுக்கு மேற்பட்ட எஸ்சி, எஸ்டி மக்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து ஆதார் அட்டைகளை பெறுவார்கள். குடிமக்களின் அடையாளங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆதார் அட்டையை கட்டுப்படுத்தும் முடிவு பார்க்கப்படுகின்றது. கடந்த ஒரு ஆண்டில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்த கவலையை நிவர்த்தி செய்வதில் அரசு கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.