ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள்; ஐக்கிய அரபு அமீரகம் - ஏமன் மற்றும் இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதல்
துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் - ஏமன் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் ஏ,பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். தொடரின் 7வது நாளான இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன.
அபுதாபியில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் - ஏமன் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
மாலை நடைபெறும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் - ஏமன் அணிகள் தங்களின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற அபார வெற்றியின் மூலம் தன்னம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது. ஹாங்காங் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது.