ஆசிய மகளிர் கூடைப்பந்து: 13ம் தேதி துவக்கம்
செரம்பன்: மலேசியாவின் செரம்பன் நகரில் மகளிர் ஆசிய கூடைப்பந்து போட்டியின் பி டிவிஷன் பி ஆட்டங்கள் இம்மாதம் 13 முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா உட்பட 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரேவா அமித் குல்கர்னி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தை சேர்ந்த கே.சுமித்ரா தேவி, ஏஞ்சலினா அருண் ஜார்ஜ் உட்பட 12 பேரும், 3 பதிலி வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement