ஆசிய கோப்பை டி.20 தொடர்; இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குதகுதி பெறும்.லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பரம எதிரி பாகிஸ்தான், 19ம் தேதி அணியுடன் மோதும்.
இந்த போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா 14 மாதங்களுக்கு பின் சர்வதேச டி.20யில் களம் இறங்க உள்ளார். இதனிடையே இந்திய அணி நாளை மும்பையில் இருந்து துபாய் செல்ல உள்ளது. இதனிடையே குடல் தசை பிடிப்பிற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 சதவீதம் உடற்தகுதியுடன் களம் இறங்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.