ஆசியக்கோப்பைக்கான போட்டி நடுவரை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
துபாய் : ஆசியக்கோப்பைக்கான போட்டி நடுவர் பைக்ராஃப்டை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. போட்டி நடுவர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் அவரை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுஉள்ளது.
கடந்த செப்டம்பர் 14 அன்று துபாயில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின் போது சர்ச்சைக்குரிய கைகுலுக்கல் சம்பவத்தைத் தொடர்ந்து, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி ஆண்டி பைக்ராஃப்டை நடுவர் குழுவிலிருந்து நீக்கக் கோரினார். கை குலுக்கல் சென்ற சம்பவத்தில் நடுவர் பைக்ராஃப்ட்டுக்கு எந்தப் பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி சட்டங்களை போட்டி நடுவர் மீறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. ஆசிய கோப்பையிலிருந்து போட்டி நடுவரை உடனடியாக நீக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், UAE-க்கு எதிரான போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நியாயப்படுத்த போதுமான காரணங்கள் இல்லை என்பதால் அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.