ஆசிய கோப்பை டி 20 தொடர் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை-பாகிஸ்தான் மோதல்
துபாய்: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன. இலங்கை அணி வங்காளதேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளன. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணி க்கு தொடங்குகிறது.