ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்-ஓமன் இன்று மோதல்
துபாய்: 8 அணிகள் பங்கேற்றுள்ள 17வது ஆசிய கோப்பை டி.20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் பி பிரிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
Advertisement
முதல் போட்டியில் ஆப்கனிடம் தோல்வி அடைந்த ஹாங்காங் இந்த தோல்வியால் சூப்பர் 4 சுற்று வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. இன்று இரவு 8 மணிக்கு 4வது லீக் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-ஓமன் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக இரு அணிகளும் மோத உள்ளன.
Advertisement