தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 சுற்றில் இன்று மோதல்: தெம்புடன் களமிறங்கும் இந்தியா... பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான்

துபாய்: 2025 ஆசிய கோப்பை டி 20 தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று சந்திக்க உள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறுகிறது. 2025 ஆசிய கோப்பை குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய தெம்புடன் இந்தியாவும், அந்தத் தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியுடன் பாகிஸ்தானும் களமிறங்குவதால், இந்த போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா கம்பீரமாக நுழைந்துள்ளது.

Advertisement

சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா என அதிரடியான தொடக்க வீரர்களும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சுசாம்சன், ஹர்திக்பாண்டியா என மிடில் ஆர்டரில் வலு சேர்க்கும் வீரர்களும் இந்திய அணிக்கு பெரும் பலம். ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடியிருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியப் போட்டியில் அவர்களுக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டு, ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான முழு பலம் வாய்ந்த பந்துவீச்சுப் படை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, சஞ்சு சாம்சன் ஓமன் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் மீண்டும் ஆறாம் வரிசைக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.  துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா-பாகிஸ்தான்

உத்தேச ஆடும் லெவன்:

இந்தியா: சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான், சயிம் அயூப், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபக்கர் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது.

எங்களுக்கு தேசத்தின் ஆதரவு எப்போதும் உண்டு!

இந்த போட்டி குறித்து நேற்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “இந்தத் தொடரில் அவர்களுக்கு (பாகிஸ்தான்) எதிராக நாங்கள் சிறந்த ஆட்டம் ஆடி வெற்றி பெற்றோம். ஆனால், அது போதாது. நாளைய (இன்றைய) போட்டியில் நாங்கள் மீண்டும் அடிப்படையில் இருந்து அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும். எங்களுக்கு எப்போதுமே தேசத்தின் ஆதரவு உள்ளது. அது இந்த ஆட்டத்திலும் இருக்கும்’’ என்றார்.

சுமார் 12 நிமிடங்கள் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் ஒருமுறை கூட ‘பாகிஸ்தான்’ என சூர்யகுமார் யாதவ் எங்கும் குறிப்பிட்டு பேசவில்லை. கடந்த ஞாயிறு அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் டாஸின் போதும், வெற்றிக்கு பிறகும் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதை பாகிஸ்தான் தரப்பு விவாத பொருளாக்கியது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமாருக்கு கங்குலி ஆதரவு;

பாகிஸ்தான் வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்காமல் புறக்கணித்தது குறித்து மாஜி கேப்டன் கங்குலியிடம் கேட்டபோது, “அட்டவணை அறிவிக்கப்பட்டபடி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. ஆனால் கை குலுக்குவதை பொறுத்தவரை அது இந்திய கேப்டனின் தனிப்பட்ட விருப்பம். அவர் அந்த முடிவை எடுத்துள்ளார் அதில் ஒன்றும் தவறில்லை” என்று சூர்யகுமாருக்கு ஆதரவாக கூறினார்.

சஞ்சுசாம்சனுக்கு கவாஸ்கர் புகழாரம்;

துபாய்: கடந்த போட்டியில் சஞ்சுசாம்சன் சிறப்பாடி ஆடி அரைசதம் அடித்தார். அவர் குறித்து கவாஸ்கர் கூறுகையில் “சாம்சன் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது, அதைத்தான் அவர் செய்தார். ஏனென்றால் அடுத்த போட்டியில் (சூப்பர் 4 சுற்று) அவர் 4வது அல்லது 5வது இடத்தில் பேட்டிங் செய்ய வரக்கூடும், மேலும் அவரது பேட்டிங் அங்கு தேவைப்படும். ஒரு பேட்ஸ்மேன் களத்தில் சில ஓவர்கள் நின்று சிக்சர்கள் பவுண்டரிகளுடன் 40 - 50 ரன்கள் குவிப்பது தன்னம்பிக்கையை கொடுக்கும். அவரது டைமிங் சிறப்பாக இருந்தது. குறிப்பாக காத்திருந்து கடைசி நொடியில் நேராக அவர் அடித்த சிக்சர் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. அதிலிருந்து அவரது தரத்தை நாம் காணலாம். எங்கு அடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு பல தேர்வுகள் உள்ளன. சில பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே லெக் அல்லது ஆப் சைட் என தாங்கள் விரும்பும் பக்கத்தில் அடிக்கும் திறமை இருக்கும். சாம்சன் அவர்களில் ஒருவர்” என்று கூறினார்.

Advertisement

Related News