ஆசிய கோப்பை ஹாக்கி பாகிஸ்தான் அணி விலகல்
புதுடெல்லி: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் 29ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் உடனான உறவை முற்றிலுமாக இந்தியா முறித்து கொண்டுள்ளது. இதனால், ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிய என்பது குறிப்பிடத்தக்கது.