ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா அமீரகம் மோதல்
துபாய்: ஆசிய நாடுகளுக்கு இடையிலான 17வது ஆசிய கோப்பை ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்நிலையில் நடப்பு சாம்பியன் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று களம் காணுகிறது. அதில் போட்டியை நடத்தும் அமீரகம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த அணிகள் மோதும் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெறுள்ள வீரர்களில் 90சதவீதம் பேர் கடந்த ஆசிய கோப்பையில் விளையாடதவர்கள்.
ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தொடர் நாயகன் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இல்லை. சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனினும் துடிப்புள்ள இந்திய அணி சாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். காரணம் அமீரகம் அதிக அனுபவமில்லாத அணி. இந்த 2 அணிகளும் இதுவரை ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே மோதியுள்ளன. எனினும் முகமது வாசிம் தலைமையிலான அமீரக அணி வெற்றிக்காக கட்டாயம் முயற்சிக்கும். அதற்கு வாய்ப்புளிக்கும் சூழல் அரிது.
நேருக்கு நேர்
* இதுவரை நடந்த 16 ஆசிய கோப்பைகளில் இந்திய 15 முறையும், அமீரகம் 3 முறையும் விளையாடி உள்ளன.
* அவற்றில் இந்தியா 8 முறை சாம்பியன் பட்டமும், 3 முறை 2வது இடமும், 4 முறை 4வது இடமும் பெற்றுள்ளது.
* ஒருநாள், டி20 என மாறி, மாறி நடைபெறும் ஆசிய கோப்பைகளில் தான் பங்கேற்ற 3 முறையும் லீக் சுற்றுடன் அமீரகம் வெளியேறி உள்ளது.
* இந்த 2 அணிகளும் 3 ஒருநாள் ஆட்டங்களிலும், ஒரு டி20 ஆட்டத்திலும் மோதியுள்ளன.
* இந்த 4 ஆட்டங்களிலும் இந்தியாதான் வென்று இருக்கிறது.
* ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் சஞ்சு சாம்சனும். வருண் சக்கரவர்த்தியும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.