ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று... ஓமனுடன் ஜாலி ஆட்டம் இந்தியா ஆயத்தம்
துபாய்: ஆசிய கோப்பையில் இன்று ஓமனுடன் நடைபெறும் போட்டிக்காக 2 புதிய திட்டத்துடன் இந்திய அணி களமிறங்க முடிவு செய்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று இருக்கிறது. இந்நிலையில் சம்பிரதாய ஆட்டமாக இன்று ஓமன் அணிக்கு எதிராக இந்திய அணி ஜாலியாக விளையாட உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சூப்பர் 4 சுற்று இன்னும் கொஞ்சம் கடினமாக மாறும். இதனால் அதற்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை இந்திய அணி செய்ய உள்ளது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காத வீரர்களுக்கு ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அதேபோல், பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சிவம் துபே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி விட்டார்கள். இதனால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டு சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு தரப்பட உள்ளது. இதனால் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக களம் இறங்கலாம். இதேபோன்று அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
அந்த வகையில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் அஸ்வின் ஆட்டத்திற்குள் வரலாம். அதே போல் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிங்கு சிங் அணிக்குள் வரலாம். இல்லையென்றால் திலக் வர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிங்கு சிங் அணிக்குள் கொண்டு வரப்படலாம். இதன் மூலம் நடப்பு தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பைத் தர கம்பீர் முடிவு எடுத்திருக்கிறார்.
* உத்தேச இந்திய பிளேயிங் லெவன் அணி: 1. அபிஷேக் சர்மா, 2, சுப்மன் கில், 3, சஞ்சு சாம்சன், 4, ரிங்கு சிங்/ திலக் வர்மா, 5, ஹர்திக் பாண்டியா, 6, சூர்யகுமார், 7, அக்சர் பட்டேல், 8,சிவம் துபே, 9, அர்ஸ்தீப் சிங், 10. வருண் சக்கரவர்த்தி, 11, குல்தீப் யாதவ்.