ஆசிய கோப்பையில் அனைத்து போட்டியிலும் பும்ரா விளையாட வாய்ப்பு இல்லை: டிவில்லியர்ஸ் சொல்கிறார்
கேப்டவுன்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அடிக்கடி வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரை முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறார். அவரின் வேலை பளுவை குறைக்கும் வகையில் பிசிசிஐ கவனமாக பயன்படுத்தி வருகிறது. அடுத்த மாதம் யுஏஇயில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர் பும்ரா இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி தென்ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:
பும்ரா அணியில் இருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் உடற்தகுதியுடன், தயாராக இருக்கிறார். அவர் எல்லா ஆட்டங்களிலும் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. முக்கியமான ஆட்டங்களில் ஆடுவார் என தெரிகிறது. தேர்வாளர்கள் முன்முயற்சியுடன் செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் மூத்த மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களை நீங்கள் இப்படித்தான் நிர்வகிக்க வேண்டும். பும்ராவின் வயது, மற்றும் காயம் பிரச்னைகளை மனதில் கொண்டு, மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே அவரை விளையாட வைப்பது என்ற முடிவு முக்கியமானது. வாரியமும் நிர்வாகமும் அவரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அது சரியாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.