ஆசிய கோப்பை டி20 வங்கதேசம் 154 ரன்: தன்ஸித் ஹசன் அரை சதம்
அபுதாபி: ஆசிய கோப்பை டி20 போட்டியில் நேற்று, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய வங்கதேசம் அணி, 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 154 ரன் எடுத்தது. ஆசிய கோப்பை டி20 தொடரின் 9வது போட்டி, அபுதாபி நகரில் நேற்று நடந்தது. இதில் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்கதேசத்தின் துவக்க வீரர்களில் ஒருவரான சயீப் ஹசன், 30 ரன்னில் ரஷித் கானிடம் வீழ்ந்தார். பின் வந்த கேப்டன் லிட்டன் தாஸ், 9 ரன்னில் நூர் அகமதுவிடம் எல்பிடபிள்யு ஆனார்.
சிறிது நேரத்தில் மற்றொரு துவக்க வீரர் தன்ஸித் ஹசன் (52 ரன்), ஷமிம் ஹசன் (11 ரன்), தவ்ஹித் ஹிருதோய் (26ரன்) சீரான இடைவெளியில் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் வங்கதேசம், 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. அந்த அணியின் ஜேகர் அலி 12 ரன், நூருல் ஹசன் 12 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கன் தரப்பில், ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி களமிறங்கியது.