ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வெளியேற்றி சூப்பர் 4 சுற்றுக்கு சென்றது இலங்கை அணி!
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெளியேற்றி இலங்கை சூப்பர் 4 சுற்றுக்கு சென்றது.முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 60, இப்ராஹிம் சத்ரான், ரஷித் கான் தலா 24 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் நுவான் துஷாரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குசல் மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்தார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - ஓமன் அணிகள் இன்று மோதுகின்றன.
Advertisement
Advertisement