ஆசிய கோப்பை ஹாக்கி; சீனாவுடன் இன்று இந்தியா மோதல்.! டிரா செய்தாலே பைனலுக்கு தகுதி பெறலாம்
ராஜ்கிர்: 12வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 ல் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா மோதி வருகின்றன. இதில் இந்தியா இன்று இரவு 7.30 மணிக்கு கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. முதல் போட்டியில் தென்கொரியாவுடன் டிரா செய்த இந்தியா, 2வது போட்டியில் 4-1 என மலேசியாவை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது.
Advertisement
இன்று டிரா செய்தாலே இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம். மறுபுறம் முதல் போட்டியில் மலேசியாவிடம் தோல்வி அடைந்த சீனா 2வது போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி 3 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளது. இன்று கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் காண்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு தென்கொரியா-மலேசியா மோதுகின்றன.
Advertisement