ஆஷஸ் முதல் டெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்தின் டாப்ஆர்டரை சிதைத்த ஸ்டார்க்
பெர்த்: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சாக் கிராலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆனார்.
இதையடுத்து பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். 20 பந்தில் 22 ரன் எடுத்த டக்கெட் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த வந்த ஜோரூட் 7 பந்தை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் லாபுசாக்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒல்லி போப் தனது பங்கிற்கு 46 ரன் எடுத்து கேமரூன் கிரீன் பந்தில் அவுட்ஆனார். உணவு இடைவேளையின் போது 23 ஓவரில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன் எடுத்திருந்தது.