ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. மோசடி செய்த பணம் சட்டவிரோத பணப் பரிமாற்றம், வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியானது. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் சோதனை நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement