அரூர் பகுதியில் நிலக்கடலை அறுவடையில் விவசாயிகள் மும்முரம்
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு பயிரிப்பட்ட நிலக்கடலை, தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இப்பருவத்தில், புன்செய் பயிராக பயிரிப்படும் நிலக்கடலை நீர்வளம் தற்போது அதிகம் உள்ளதால், நல்ல விளைச்சலை கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
ஏக்கருக்கு 20 மூட்டை வரை விளைச்சல் கிடைத்துள்ளது. அத்துடன் விலையும் அதிகம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விளை நிலங்களை பண்படுத்தி, டிராக்டர் ஓட்டி உழுது வருகின்றனர். இந்தாண்டு அனைத்து வகை பயிர் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Advertisement