அரும்பாக்கத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழியில் மட்டுமே விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். விண்ணப்ப கட்டணம், இணையவழி கலந்தாய்வு கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும். அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு விண்ணப்பங்கள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரிக்கு 01.08.2025 என்று இருந்தது, 08.08.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.